
கோவை,
கோவை வட்டமலைபாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் வேர்ல்ட் மிஷினரி இவாஞ்சலிசம் ஆப் இந்தியா டவுலஸ் நினைவு குழந்தைகள் இல்லத்தின்
மண்டல பொறுப்பாளர்
எஸ்.ஜெயபால் (73) தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் மேற்கு மண்டல ஐஜி சுதாகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில்
நான் கோயம்புத்தூரின் மண்டல பொறுப்பாளராக 1985-ம் ஆண்டு முதல் 37 வருடங்களாக நிர்வாக பொறுப்பில் இருந்து வருகிறேன். இதன் தலைமையிடம் ஹைதராபாத்தில் உள்ளது. இதற்கான பதிவு செய்யப்பட்ட நிர்வாகக்குழு ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. கோவை, குருடம்பாளையம் கிராமத்தில் 7 ஏக்கர் நிலம் உள்ளது,
எங்கள் சபையில் மொத்தம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் ஜான் ஆகஸ்டின் என்பவர் தான் வேர்ல்டு மிசினரி இவாஞ்சலிசம் ஆப் இந்தியாவின் சேர்மன் என்று கூறிவருகிறார். மேற்படி ஜான் அகஸ்டின் மீது இந்தியா முழுவதும் போலியான ஆவணங்கலின் மூலம் சர்ச் சொத்துக்களை விற்றது தொடர்பாக சுமார் 18க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர்மீது நிலுவையில் இருந்து வருகின்றன. மேலும் அவ்வழக்குகளில் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார் . மேலும் சுப்ரீம் கோர்ட் மேற்படி ஜான் அகஸ்டினுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு மேற்படி ஜான் அகஸ்டினின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது.
இதை அறிந்த நான், வருவாய்த்துறை ஆவணங்களை பார்த்தபோது அவர்கள் பெயரிலும் மாற்றம் செய்யபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு மேற்படி ஜான் அகஸ்டின், ஸ்டேபான் ஜோயல், வில்சன், இம்மானுவேல் தாஸ் மற்றும் சிலர் கூட்டு சேர்ந்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்து வருவதை அறிந்து ஏற்கனவே பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் அவர்களிடம் மனு அளித்துள்ளோம். இந்நிலையில் ஜான் அகஸ்டின் மற்றும் ஸ்டேபான் ஜோயல் ஆகியோர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி கிரையம் செய்ய முயற்சித்தனர். மேலும் அவர் கூறியது போல வேர்ல்ட் மிஷினரி இவாஞ்சலிசம் ஆப் இந்தியா என்று ஒன்று இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கூட்டு சதி செய்து போலியான தகவல்களின் பேரில் பொய்யான புகார் மனு அளித்து ஆள்மாற்றம் செய்து சட்ட விரோதமாக போலியான ஆவணங்களை தயார் செய்து போலியான கையொப்பமிட்டு வேர்ல்ட் மிஷினரி இவாஞ்சலிசம் ஆப் இந்தியாவிற்க்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்த மேற்படி ஜான் அகஸ்டின், முகமது ஹாசிம், ரவூஃப் அலி, ஸ்டெபான் மற்றும் சம்சுதீன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.