கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்கம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆவதையொட்டி வர்த்தக தின குடும்ப விழா கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவில் உள்ள ஜிஎஸ்என் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் டி.முத்துப்பாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் டி.சாமுவேல்ராஜ், அவைத்தலைவர் என்.தேவராஜ், துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செய்தி தொடர்பாளர் ஏ.தனிஷ்
வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக கண்ணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். புஷ்பலதா ராஜகோபால், பிஜிஎம் மருத்துவமனை டைரக்டர் ஏ.ராதா பிரசாத் குத்துவிளக்கு ஏற்றினர்.
இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கி பேசியதாவது: விடுதலைப்போருக்கு வித்திட்ட வீரம் சார்ந்த மண் இது. தமிழக அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு உதவி செய்து வருகிறது. பொது மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடம் வகிப்பது வர்த்தகர்களே. தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து சிறந்த முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தன்னலம் பாராமல் சேவை புரிந்து வருகின்றனர். வர்த்தகர்களை காக்கும் விதமாக வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கு உள்ள எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அதனை தமிழக முதல்வர் பார்வைக்கு உடனடியாக கொண்டு சென்று அதற்கு உரிய தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் , சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது , வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக கடைவீதி சென்று வர சிங்காநல்லூர் மேம்பால பணிகளை விரைந்து துவக்கி முடிக்க வேண்டும் , கடைகளுக்கான லைசன்ஸ் வாங்கும் முறைகளை எளிதாக்க வேண்டும் , மார்க்கெட்டுகளில் கடைக்காரர்களுக்கு சுங்கம் வசூலிக்க கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆர்.சந்திரன், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முத்தூஸ் மருத்துவமனை சேர்மன் டாக்டர் எம் .முத்து சரவணகுமார், பொடாரன் குரூப்ஸ் மேனேஜிங் டைரக்டர் சுரேஷ்குமார், ஜான்சன் ,அய்யா வைகுண்டர் திருப்பதி தலைமை நிர்வாக அறங்காவலர் எஸ்.கவிமணி, சமூக சேவகர் தளபதி இளங்கோ, ரஞ்சன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் சி.கே.ராமர், வர்த்தக சங்க சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த் ஜெயராஜ், ஏர்போர்ட் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் வி.செல்வின் ராஜன், கவுரவ ஆலோசகர்கள் தென்னம்பாளையம் கிளைத் தலைவர் பி.செல்வராஜ், எல்ஐசி ஜெயசீலன், எல் ஐ சி பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மேலும் விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. விழாவில் கோவை மாவட்ட வர்த்தக சங்க பகுதி கிளை நிர்வாகிகள்மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தென்னம்பாளையம் கிளை தலைவர் பி.செல்வராஜ் நன்றி உரை நிகழ்த்தினார்.