தமிழகம் முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில்  எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும்…

அதற்குக் காரணம் அளவில்லாத பிரியாணி குறைந்த விலைக்கு வழங்குவது…

ஒரு கிலோ சிக்கன் 200 ரூபாய்க்கு விற்கும் நிலையில் இவர்கள் எப்படி அளவில்லாத சிக்கன் பீஸ்களுடன் வழங்க முடியும் என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்…

அதுதான் இவர்களது தொழில் ரகசியம் என்று சொல்லலாம்…

இந்த கடைகளுக்கு என கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படும் ஜனதா சிக்கனை வாங்கித்தான் இவர்கள் பிரியாணி ,சில்லி சிக்கன், கபாப் என அனைத்து சிக்கன் ஐட்டங்களையும் தயாரித்து மலிவு விலைக்கு  விற்கிறார்கள்.

இந்த ஜனதா சிக்கன் குறித்து கூகிள் இணையதளத்தில் தேடினால் இந்த சிக்கன் விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் கொட்டி கிடக்கிறது…

இந்த ஜனதா சிக்கன் விற்பதற்கு என பிரத்தியேகமாக சில கடைகள் உள்ளன. இந்த ஜனதா சிக்கனை பெரும்பாலும் வீட்டில் செல்லப் பிராணிகளுக்கு குறிப்பாக நாய் பூனைகளுக்கு தான் வாங்குவது வழக்கம்.

இந்த ஜனதா சிக்கனை வாங்கித் தான் இவர்கள் அளவில்லாத சிக்கன் பிரியாணியை அள்ளி வழங்குகிறார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவையில் பல இடங்களில் செயல்பட்டு வரும்  ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலின் கிளை ஹோட்டல் கோவை ஜி.என் மில் பகுதியில் செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்கு சென்று கிரில் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அதனை வீட்டுக்கு சென்று சாப்பிட எடுக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் சிக்கன் கடினமாக இருந்து உள்ளது.  இதை அடுத்து மீண்டும் அந்த ஹோட்டலுக்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அங்கிருந்த மேலாளர் சிறிது தவறு நடந்து விட்டதாகவும் அதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறி உள்ளார். ஹோட்டலுக்குள் சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து காட்டுமாறு கூறி உள்ளார். ஏராளமான குளிர்சாதன பெட்டிகளில் சிக்கன்களை அடுக்கி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து மேலாளர் இடம் கேட்டபோது இங்கிருந்து பத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு அனுப்புவதற்காக வைத்து உள்ளதாக கூறுகின்றார். இதையும் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு  என வாடிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார். இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 இதுபோன்ற ஹோட்டல்களுக்கு சென்று உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும்…

பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாரோடு இப்படி நாய்க்கு போடும் ஜனதா சிக்கனால் தயாராகும் அளவில்லா பிரியாணி ,கபாப் சிக்கன்களை சாப்பிடாமல் நல்ல இறைச்சியை வாங்கி வீட்டில் சாப்பிட்டால் உடல் நலனை பாதுகாத்து கொள்ளலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *