பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் பொதுமக்கள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜே.ஆர்.ஜெயராம் உட்பட அதிமுகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *