கோவை,
கோவை மாநகர காவல்துறை சார்பில்
போக்குவரத்து பிரிவு போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை
17.01.2023 அன்று கோவை மாநகர பகுதிகளில் காணும் பொங்கல் பண்டிகையின் போது, மக்கள் அதிகம் கூடும் சுங்கம், உக்கடம் மற்றும் பேரூர் ரோடு ஆகிய இடங்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, கீழ்கண்டவாறு வாகனம் நிறுத்த வசதி / வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வாகன நிறுத்தும் இடம் :
வாலாங்குளம் – பண்டிகை கொண்டாட வாலாங்குளம் வரும் பொது மக்கள், வாலாங்குளத்தில் வடக்கு கரை (பஸ் டெப்போ பின்புறம்) உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
D.B.ரோடு – D.B.ரோடு வரும் பொது மக்கள், தங்கள் வாகனங்களை சாஸ்திரி மைதானம் மற்றும் மாநகராட்சி பயன்படுத்திக் கொள்ளலாம். வாகன நிறுத்தும் இடங்களை உக்கடம் பெரியகுளம் – உக்கடம் பெரியகுளம் வரும் பொது மக்கள், தங்கள் வாகனங்களை S.H.காலனி (உக்கடம் காவல் நிலையத்தின் எதிர்புறம் உள்ள புதிய மேம்பாலத்தின்) அருகில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
போக்குவரத்து மாற்றம்:
சிங்காநல்லூர் – பாலக்காடு + கோவை, திருச்சி ரோடு சிங்காநல்லூர் வழியாக வந்து, பாலக்காடு சாலை செல்லும் கனரக வாகனங்கள், இராமநாதபுரம் சந்திப்பு வந்தவுடன், இடபுறமாக திரும்பி நஞ்சுண்டாபுரம் சாலை சென்று, போத்தனூர், சாராதா மில் ரோடு, சுந்தராபுரம் வழியாக பாலக்காடு சாலையை அடைந்து செல்லலாம்.
வாகனங்கள்:
பாலக்காடு – திருச்சி சாலையிலிருந்து, புட்டுவிக்கி வழியாக திருச்சி சாலை செல்லும் கனரக குனியமுத்தூர், சுண்ணாம்புக்காளவாய், ஆத்துப்பாலம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் வழியாக சென்று, இராமநாதபுரம் திருச்சி சாலை சந்திப்பை அடைந்து செல்லலாம்.
> புட்டுவிக்கி – கோவை புட்டுவிக்கியிலிருந்து கோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு, இராமமூர்த்தி ரோடு, காந்திப்பார்க் அடைந்து செல்லலாம்.
D.B.ரோடு → சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், D.B.ரோடு ரவுண்டாவில் சூழ்நிலைக்கேற்றவாறு போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.