கோவை,
கோவை ஸ்ரீ சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவர் என் மகன் மோகன் குமார் (45) இவர் மநக வீதி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக தங்க நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்ட வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முசுமே சதாரா என்பவரின் மகன் பிரமோத் விடாய் போஸ்லே (20) என்ற வாலிபர் பணிபுரிந்து வந்தார். பட்டறையில் இரவு நேரம் பணி நடக்கும் போது மோகன் குமார் கடையின் சாவியை அங்கு பணிபுரியும் ஊழியர் நோவா என்பவரிடம் கொடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பட்டறையில் பணிபுரிந்த பிரமோத் விடாய் போஸ்லே தனக்கு பட்டறையில் வேலை இருப்பதாக கூறி நோவாவிடம் கடையை திறக்க கூறியுள்ளார். இதை அடுத்து நோவா பட்டறையை திறந்துள்ளார் .பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே சென்று விட்டார் .மீண்டும் வந்து பார்த்த போது பிரமோத் விடாய் போஸ்லே அங்கு இல்லை. மேலும் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 67 கிராம் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது. 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் வட மாநில வாலிபர் மாயமானதை கண்டு பட்டறை உரிமையாளர் மோகன் குமார் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .