முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 91 வது பிறந்தநாள் விழா அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பாக கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் நடைபெற்றது. அப்துல் கலாம் பவுண்டேஷன் நிறுவனர் ரூபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கோவை காவல் உதவி கமிஷனர் சேகர், சாய்ராம் டிரஸ்ட் இயக்குனர் ராஜ்குமார், சிவசக்தி பில்டர்ஸ் தங்கராசு, தென்காசி மாவட்ட நிர்வாக இயக்குனர் முகமது ராஜா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 91 கிலோ கேக்கை வெட்டி கொண்டாடினர். பின்ன பேசிய அப்துல் கலாம் ஃபவுண்டேஷன் நிறுவனர் ரூபன் அறக்கட்டளையில் தொலைநோக்கு திட்டமான குடும்ப பொருளாதார முன்னேற்றத் திட்டத்தில் ஏழை எளிய குடும்பப் பயனாளிகளுக்கு பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி கை பெண்கள் விவசாயிகளுக்கு மற்றும் கல்வி அனைத்து வகையான நிதி உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் இந்த நிதி உதவியானது 40 சதவீத முதல் 50 சதவீதம் வரை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படும் என்றும் கூறினார். பின்னர் நடைபெற்ற விழாவில் மதுரை சிவகாசி தென்காசி உடுமலைப்பேட்டை சேலம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அப்துல் கலாம் பவுண்டேஷன் கிளை அலுவலக உறுப்பினர்கள் வந்திருந்தனர் அவர்களுக்கு அப்துல்கலாம் பவுண்டேஷன் சார்பாக ஐந்து கோடி கான நிதி உதவி ஐந்து கிளைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திரஜித் ரம்யா கௌசல்யா சத்திய பிரியா உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்