கோவை,கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 2 கூடுதல் டி.எஸ்.பிக்கள், 3 டி.எஸ்.பிக்கள் அடங்கிய தனிப் படை அமைத்து சிபிசிஐடி டிஜிபி உத்தரவிட்டுள்ளாா்.
மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தலைமையில் நடைபெற்று வந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டாா். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க 2 கூடுதல் டி.எஸ்.பிக்கள், 3 டி.எஸ்.பிக்கள் அடங்கிய தனிப் படையை அமைத்து சிபிசிஐடி டிஜிபி உத்தரவிட்டுள்ளாா்.
விரைவில் இந்த தனிப் படையினா் கொடநாடு வழக்கு விசாரணையைத் தொடங்குவாா்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.