கோவை,
தீபாவளி மற்றும் பண்டிகைகால விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி மற்றும் பண்டிகைகால விடுமுறையையொட்டி முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவை-உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05304), வரும் 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 4.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, 3-வது நாள் காலை 8.35 மணிக்கு கோராக்பூரை சென்றடையும்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூர் – கோவை இடையிலான சிறப்பு ரயில் (05303), கோராக்பூரில் இருந்து வரும் 8-ந்தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோராக்பூரில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 7.25 மணிக்கு கோவையை வந்தடைகிறது.இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் இரண்டம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1, மூன்றாம் வகுப்பு ஏ.சி.-2, படுக்கை வசதி பெட்டி-10, சாதாரண பெட்டி-7 இணைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
%d bloggers like this: