சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் அதிமுக சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் தலைமையில், கோவை மாவட்ட செயலாளர் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினரான அம்மன் கே அர்ஜுனன் முன்னிலையில் ,அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளர் கே .ஆர் அர்ஜுனன் , திரைப்பட இயக்குனர் ஆர்.வி உதயகுமார், கழக பேச்சாளர்கள் தென்றல் விஜய், திருப்பூர் சாரதா ,நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாணசுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மேலும் நிகழ்ச்சியில் கே ஆர் ஜெயராம் பேசும்போது அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த விடிய அரசு தடை செய்துள்ளது மேலும் இந்த திமுகவின் விடிய அரசு கலெக்ஷன் கரப்ஷன் கட்டிங் என்ற மூன்று மந்திரங்களை மட்டுமே முன்வைத்து ஆட்சி நடத்துகிறது என்று பேசினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் ,காது கேட்கும் கருவி ,வேஷ்டி ,சேலை உள்ளிட்ட நலத்திட்டங்கள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.