
கோவை,
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைத்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த சொந்த ஊரிலிருந்து கோவைக்கு வந்து நகை பட்டறை ஒன்று பணிபுரிந்து வந்தார். நகை செய்வதில் திறமையாக இருந்த சுஜித் மைததி தனியாக பட்டறை ஒன்றை ஆரம்பித்தது நகைகளை செய்ய ஆரம்பித்தார் இவரது டிசைன்கள் நகை வியாபாரிகளுக்கு பிடித்துப் போகவே இவரிடம் அதிக அளவில் நகைகள் செய்ய ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர் .தினமும் கிலோ கணக்கில் தங்கங்களை வாங்கி நகைகளாக செய்து கொடுத்து வந்தார். இதை தொடர்ந்து திருமணம் செய்த அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை செட்டி வீதி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது நண்பர் ஒருவர் மூலம் ஆன்லைனில் பெட்டிங் கட்டினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்க முடியும் என முடிவு செய்தார். இதை தொடர்ந்து பெட்டிங்கில் பணம் கட்டினார். முதலில் சிறிதளவு பணம் லாபமாக கிடைத்துள்ளது .இதை தொடர்ந்து அவர் அதிக அளவில் பணத்தை பெட்டில் கட்டி உள்ளார் .அதில் அவருக்கு ஏராளமான பணம் தொலைந்தது. இதன் காரணமாக பெட்டிங் மூலம் இழந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் பெற்று விடலாம் என பணம் கட்டினார். ஆனால் அதிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுஜித் மைத்தி நகை ஆர்டர் கொடுத்தவர்களுக்கு சரியான முறையில் நகைகளை இருந்துள்ளார். மேலும் மற்றவர்கள் கொடுத்த தங்கத்தை வைத்து முதலில் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு நகைகளை செய்து கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் நகைகளை செய்து கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது இதை அடுத்து கடைசியாக இரண்டு கிலோ அளவிற்கான தங்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி விட முடிவு செய்தார் .பின்னர் தனது மனைவி மற்றும் மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் .அதன் பிறகு சில நாட்களில் 2 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு திடீரென தலைமறைவானார் .இதை அடுத்து நகை ஆர்டர் கொடுத்து இருந்த பிரகாஷ் ,ஜனா ,குருசாமி ,கனகராஜ் உட்பட பலர் வெரைட்டி ஹால் ரோடு மற்றும் பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் தப்பி ஓடிய சுஜித் மைத்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது .தனிப்படை போலீசார் தீவிரமாக அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசார் தகவல் கிடைத்தது .பின்னர் அங்கிருந்து அவர் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது .இந்நிலையில் மீண்டும் கோவைக்கு வந்த சுஜித் மைத்தியை தனிப்படை போலீசார் கோவை ரயில்வே ஸ்டேஷனில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பட்டறை நடத்தி இரண்டு கிலோ தங்க நகை உடன் மாயமான வட மாநில வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்திருப்பது நகை பட்டறை அதிபர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.