ஏஜேகே., கல்லூரி போக்குவரத்திற்கு விவசாய நிலங்கள் பறிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்

கோவை,
கோவை பாலக்காடு சாலையில் உள்ள  பிச்சனூர் ஊராட்சி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை ளித்துள்ளனர்.அதில்,எங்கள் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக அஜித் குமார்,என்பவருக்குச் சொந்தமான ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அமைந்திருக்கும் இடத்தின் போக்குவரத்து பாதையானது மதுக்கரை தாலுகா பிச்சனூர் வட்டம்  பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து அமைந்துள்ளது.கல்லூரி செயல்பட போதுமான போக்குவரத்துபாதை இல்லாத நிலையில், இதனிடையே கல்லூரியை மேம்படுத்தும் நோக்கில் அதன் உரிமையாளர் அருகில் இருக்கும் விவசாய நிலங்களை வாங்கி அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தனது கல்லூரிக்கு போக்குவரத்து பாதையாக பிச்சனூர் பஞ்சாயத்துக்கு, தானசெட்டில்மென்ட் ஆக கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்திருக்கிறார்.இந்த கல்லூரியின் போக்குவரத்து வசதிக்காக சாலையில் அமைந்துள்ள விவசாய நிலத்தை தர மறுக்கும் நில உரிமையாளர்களை போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் பயத்தை உண்டாக்கி நிலத்தை அபகரிக்க வற்புறுத்தி வருகின்றனர்
இதனிடையே அருகில் இருக்கும் அவருக்கு பாத்தியம் இல்லாத விவசாய நிலத்தின் எல்லைக்கல் கற்களை அகற்றிவிட்டு நிலங்களை தனது கல்லூரியின் போக்குவரத்து வசதிக்காக பிச்சனூர் வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலர் போன்ற அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போக்குவரத்து பாதையை விரிவுபடுத்த சட்டப் புறம்பாக செயல்பட்டு வருகிறார்.இதனிடையே மேலே குறிப்பிட்ட கல்லூரி இருக்கும் இடத்தின் அருகில் வசிக்கும், பழனியம்மாள் என்பவரின் இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு அவரின் ஆவணத்தில் உள்ள அளவு மற்றும் எல்லைகளைத் தெரிந்து கொள்ள அளந்து தருமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.ஆனால் அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.எனவே கல்லூரி செயல்பட போதுமான போக்குவரத்து பாதை இல்லாத போதிலும் அதற்கான அனுமதி அளித்த அதிகாரிகள்,இதுபோன்று கல்லூரிக்கு ஆதரவாக செயல்படும் பிச்சனூர் வருவாய்த்துறை, நில அளவையாளர்கள், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலர்,மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர் .