
கோவை,
கோவை ரத்தினபுரி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் .டாடாபாத் மலையாள சமாஜ் பள்ளி அருகே ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்ததும் அதனை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது ம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷன் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பரணி குமார் என்பவரின் மகன் விவேக் பாரதி( 18), ஈஸ்வரன் என்பவரின் மகன் தனபாலன் (19 ), காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் கரிகாலன் (49 ) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் பள்ளி மாணவன் ஒருவனும் இருந்துள்ளார். இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் இவர்களுடன் தொடர்புடைய மாணிக்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.