ஆ.ராசாவை கண்டித்து செவ்வாய்கிழமை கடையடைப்பு

கோவை,

இந்துமுன்னணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் சிறப்புரையாற்றினார்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா  இந்துக்களை கேவலமாக   பேசியுள்ளார்.இது கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.மத பாராபட்சம் இல்லாமல் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்துக்களை தவறாக பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.இவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும்  இவர் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் வரும் நாளை  இந்துமுன்னணி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பெரும் பான்மையான காவல்நிலையங்களில்  இவர்மீது இந்து முன்னணியினர் புகார் அளித்துள்னர்.இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி பாராளுமன்ற  தொகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை 

கடையடைப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மூலமாக இவரின் பதவியை பறிக்கும் வண்ணம் குடியரசுத்தலைவருக்கு 

கடிதம் அனுப்ப உள்ளோம்.

வருகின்ற செப்டம்பர் 19 ம் தேதி இந்துமுன்னணிநிறுவனர்  இராம.கோபாலன் அவர்களின் பிறந்தநாளை இந்து எழுச்சி நாளாக கொண்டாட உள்ளோம்.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மாவீரன் சசிகுமாரின் நினைவு தினமான செப்டம்பர் 22 ம்தேதி தொண்டாமுத்தூரில் 5000 பேர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.என பேசினார்.  மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார்.கோட்ட செயலாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி ரமேஷ்  ,மகேஷ்வரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *