சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில்
ஆ.ராசா மீது பாஜக சார்பில் புகார்

இந்துக்களை இழிவாக பேசிய திமுகவை சேர்ந்த நீலகிரி எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்குமாறு சிங்கை மண்டல் மற்றும் ஒண்டிபுதூர் மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில்  புகார் அளிக்கப்பட்டது . இதில்  ஒண்டிப்புதூர் மண்டல் தலைவர் பிரபு, சிங்கை மண்டல் தலைவர் சதீஷ், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மனோஜ் குமார், பொருளாளர் கார்த்தி, செயலாளர் மாதவன் உள்ளிட்ட மாவட்ட மற்றும், மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர்.