
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஒரு கிலோமிட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலைப்பண்ணை உருவாக்கப்பட்டது. இது 122 ஆண்டுகள் பழமையான பழப்பண்ணை ஆகும். இந்த பழப்பண்ணை கடல் மட்டத்தில் இருந்து 340 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சரசரியாக ஆண்டுதோறும் 180 சென்டிமீட்டர் மழை பெய்கிறது.
இங்கு பாக்கு சில்வர் ஒம். காபி, மங்குஸ்தான். துரியன் பழம் ரம்புட்டான். இலவங்கப்படடை எயூலிச்னா, நொவியமாய் வெட் ஆப்பிள் ,பலா ஆகிய பல்வேறு வகையான பழ மரங்கள் வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச் செடி குரோட்டன்ஸ், செம்பருத்தி, அரிக்கா பனை, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்லாறு பழப்பண்ணையின் பழமையை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் காண்போர் வியக்கும் வண்ணம் ராட்சத விழுதுகளுடன் வானூயர்ந்து கம்பீரமாக காட்சியளிகிறது.இத்தகைய சிறப்புகளை கொண்ட பழமைவாய்ந் த கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வழிகளில் உள்ள பெரிய சிறிய குகைகளில் காண்போர் வியக்கும் சிறுத்தை, குரங்கு, முதலை விழுங்குவது என வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானையின் வழித்தடமான கல்லாறு சாலையை கடந்து செல்லும் கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். நீதிபதிகள் குழவினரின் அறிவுரையின் பேரில் வனத்துறையின் வேண்டுகோளின்படி நெடுஞ்சாலை துறை சார்பில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சாலையை கடந்து செல்லும் வங்குகளின் பாதுகாப்பு கருதி ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
இத்துடன் யானைகள் வழித்தடத்தில் உள்ள கல்லாறு பகுதியில் பல அதிரவு நடவடிக்கைகளுக்கான உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கி வருகிறது.
இதன முதல் கட்டமாக யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையை மூட உத்தரவிட்டார். பழபண்ணை இருக்கும் இடத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்ட்டுள்ளது. இது சமுக ஆர்வலர்கள்ளடயே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.