நட்சத்திர ஹோட்டலில் கும்மாங்குத்து
பிஜேபி நிர்வாகி துப்பாக்கி ஜான்சன் உள்பட நான்கு பேருக்கு வலை வீச்சு
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள பப்பீஸ் ஓட்டலில் போன வாரம் சனிக்கிழமை இரவு சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அது ஜோடியாக வரும் தம்பதிகளுக்காக நடத்தப்படும் ஒரு ஆட்டம் பாட்டம நடக்கும் நிகழ்ச்சி….
அந்த கூத்தில் கலந்து கொள்ள ஜோடி இல்லாமல் வந்த நண்பர்கள் லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரீஷ் , நடன நிகழ்ச்சி நடந்த அரங்குக்குள் செல்ல முயற்சித்தனர். அவர்களிடம் இந்த நவ நாகரீக கூத்தின் விதிமுறையை விளக்கமாக விரிவாக அந்த ஓட்டல் ஊழியர்கள்… ‘ஜோடியாக வந்தால் மட்டுமே தான் இங்கு அனுமதி’ என்றனர்.
பெண் ஜோடிகள் இல்லாமல் தனியாக வந்த அந்த நபர்கள் கடுப்பாகி போனார்கள்..
அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்குவாதம் செய்தார்கள் மேலும் அவர்கள் கூறியதாவது:- நாங்கள் ‘டிக்கெட் வாங்கிக்கொள்கிறோம். கூடுதலாகவும் பணம் செலுத்தவும் தயாராக இருக்கிறோம். உள்ளே அனுமதித்தால் மட்டும் போதும்’ என்றனர்..
அந்த கூத்தில் கலந்து கொள்ள பரிதவித்த அவர்களின் கோரிக்கையை ஓட்டல் ஊழியர்கள் ஏற்கவில்லை.
பணக்கட்டுகளை அள்ளி வீசினர்…
இரு தரப்பினருக்கும் கடுமையான் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வெறி பிடித்த அந்த நபர்களை ஓட்டல் ஊழியர்கள் சுற்றிவலைத்து கும்மாங்குத்து குத்தி.. கீழே தள்ளி புரட்டி புரட்டி ஃபுட்பால் ஆடிய காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது…அப்போது ஆத்திரமான ஜான்சன் காரை எடுத்து ஓட்டல் ஊழியர்கள் மேல் ஏற்ற முயன்றார்.
இந்த கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் கூடியது..
இந்த அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் ஓடோடி வந்தனர்…
போலீசை பார்த்ததும் அந்த நான்கு பேர் கும்பல் தப்பி ஓடியது. இந்த சூப்பர் ஃபைட் தொடர்பாக, லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்…
ஹோட்டல் சிசிடிவி., காட்சிகளை கைப்பற்றி… போலீஸ்….விசாரணை நடத்தி வருகிறது…!
கும்மாங்குத்து சூப்பர் ஃபைட் அனல் பறக்கும் சண்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக அடி உதை வாங்கிய நால்வரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த குத்துச்சண்டை வழக்கில்… சிக்கியுள்ளவர்கள் யார் என விசாரித்தபோது அந்த நால்வரில் ஒருவர் ஜான்சன் என்கிற துப்பாக்கி ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது.
இதில் ஜான்சன், பிஜேபி…யின் சிறுபான்மையினர் பிரிவின் கோவை மாவட்ட தலைவர்.. என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்..
மேலும் இந்த ஜான்சன் ஏற்கனவே சாய்பாபா காலனியில் உள்ள மது பான பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பின்னர் கைதாகி ஜெயிலுக்கு பொய் வந்து துப்பாக்கி ஜான்சன் என பெயர் பெற்றவர்…
அதேபோல கொரோனோ ஊரடங்கு சமயத்தில் கணபதி செக் போஸ்டில் தகராறு செய்து போலீசில் மாட்டியவர் என்பதும் கூடுதல் தகவல்…
இந்த நிகழ்ச்சியை சாதாரணமாக கடந்து சென்று விடாமல் பிஜேபியின் தலைமை நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக இதற்கு ஒரு சரியான தீர்வை ஏற்படுத்தினால் மட்டுமே சரியப் போகும் பிஜேபியின் செல்வாக்கை காப்பாற்ற முடியும்..