போதைப்பொருள் கடத்த முயன்றவர்கள் கைது

கோவை நகரில் தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இருந்தபோதும் தொடர்ந்து இளைஞர்களை குறிவைத்து போதை பொருட்கள் நடமாட்டம் கோவையில் அதிகரித்து வருகிறது .இந்நிலையில் கோவை ரத்தினபுரி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவை சக்தி ரோடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதை அடுத்து அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களும் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது .இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற விசாரணை நடத்தினர். விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த அபுதாஹீர் என்பவரின் மகன்( 44) மற்றும் கரும்புக்கடை பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகன் முகமது உசேன் (47 )என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தி விசாரணையில் அவர்கள் இருவரும் பெட்டிக்கடை நடத்தி வந்ததும் பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.மேலும் இவர்களிடமிருந்து 415 கிலோ குட்கா பொருள்களும் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுடன் போதை பொருட்கள் விற்பதில் தொடர்புடைய சூர்யா, பாபு, விக்ரம் சிங், பவர்சல், ஐயன் கான், ராணா சிங், உமர் சிங் ,விஜய், முகமது, கமல் சிங், சக்கரவர்த்தி ,முகேஷ் குமார் ,அப்துல் ரஹீம், ரசாக் ஆகிய 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர்