தமிழக முதல்வர் குறித்து அவதூறு
அதிமுக பிரமுகர் கைது

கோவை அடுத்த அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்ற அக்ரி சுப்பிரமணியன் ( 46). இவர் கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார் . சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.