கோவையில் மீன்கள் விலை வீழ்ச்சி

கோவை:

கோவை உக்கடம் லாரி பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்கெட்டில் கன்னியகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், ராமேஸ்வரம், கடலூர், மற்றும் கேரள மாநிலஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். ஓணம் பண்டிகை காரணமாக கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் மீன்கள் விலை குறைந்துள்ளது இது குறித்து கோவை மாவட்ட மீன்கள் வியாபாரிகள் கூறியதாவது:-தற்போது கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது. ஆகையால் அங்கு மீன்கள் வியாபாரம் குறைந்துள்ளது. வியாபாரிகள் மீன்களை கோவை மொத்த மார்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக மார்கெட்டிற்கு இன்று அதிகளவில் மீன்கள் வந்துள்ளது. மேலும், மீன்களின் விலை குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ. 1000க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன் இன்று ரூ.800க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.350க்கு விற்க்கப்பட்ட நண்டு ரூ.150க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ. 320க்கு விறக்க பட்ட பாறை ரூ.200க்கு விறக்கப்படுகிறது. கிலோ ரூ. 320க்கு விற்க்கபட்ட ஊளி ரூ.200க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.350க்கு விற்க்கப்பட்ட சின்ன சீலா ரூ. 200க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.350க்கு விற்க்கப்பட்ட நண்டு ரூ. 150க்கு விற்கப்படுகிறது. ரூ.3 அயிரத்திற்கு விற்க்கபட்ட ஒரு டிப்பர் மத்தி மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.750க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.600க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.150 க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.90க்கு விற்கப்பட்டது.