கூலி தொழிலாளி தற்கொலை

கோவை சித்ரா அடுத்த பூங்கா நகர் பகுதியில் சேர்ந்தவர் மகேந்திரன் என்பவரின் மகன் ராஜசேகர் (32). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் .மேலும் இவர் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படும் நபராக இருந்து வந்தார். இதனால் இவர் சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் ராஜசேகரின் தந்தை மகேந்திரன் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவரது வீட்டில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் மகேந்திரனின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் ராஜசேகரை அவரது மனைவி செல்போன் மூலம் அழைத்து ஊருக்கு வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் மகேந்திரன் மறுத்து விட்டார். இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த மகேந்திரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கு போடடு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்று இருந்த அவரது தாயார் தேவி வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த பொழுது ராஜசேகர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது ராஜசேகர் இறந்து போய் இருப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *