கோவை ரயில் நேரங்கள் மாற்றம்

கோவை வழியாக செல்லும் ரெயில்கள் இன்று மற்றும் நாளை தாமதமாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய உதய் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:22665), ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு கோவை புறப்பட்டு வந்தது. ஆலப்புழாவில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:13352), ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று ஆலப்புழாவில் இருந்து நாளை காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:13352), ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்படும். எர்ணாகுளத்தில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:22816), 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 11.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கோவை வழியாக மங்களூரு சென்ட்ரல் புறப்பட்டு வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:22637), வரும் வழியில் தேவையான இடத்தில் 35 நிமிடங்கள் நிறுத்திவைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.