தனியார் நகர பேருந்தில் மாணவரிடம் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து இணை ஆணையரிடம் புகார்

கோவை ஹோப்காலேஜ் அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் வசிப்பவர் பாலாஜி. இவர் காளப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பார்மஸி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிகிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக கோவை அவினாசி சாலை சோமனூரிலிருந்து சிட்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் நகர பேருந்து வழித்தட எண்20A வண்டி யிள பாலாஜி பயணம் செய்துள்ளார் . அவர் அரசு மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு பயண சீட்டு வழங்குமாறு நடத்துனரிடம் கேட்டு ரூ. 10 அளித்துள்ளார் .தொகையை பெற்றுக்கொண்ட நடத்துனர் ரூ.7- ற்கான பயண சீட்டுகொடுத்து மீதி பாக்கி தொகையும் அளிக்கவில்லை. இதற்கிடையில் பேருந்து அரசுமருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தம் வந்ததால் பாக்கி தொகை கேட்டும் நடத்துனர் வழங்கவில்லை. இதற்கிடையில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கிவிட்டார் .இது தொடர்பாக அவரது தந்தை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் நா.லோகுவிடம் தெரிவித்தார்். அப்பொழுது பயண சீட்டினை வாங்கி பார்த்தபொழுது அதில் 5- ரூபாய் பயண சீட்டிற்கு பதிலாக ரூ7- என அச்சிடப்பட்ட பயண சீட்டு வழங்கபட்டது தெரியவந்தது. இவ்வாறு சிட்ரா முதல் வரதராஜா மில் வரை ஒரு நிலை நிறுத்தத்திற்கு கட்டணமாக ரூ5/- நிர்ணயம் செய்துள்ள நிலையில் கூடுதலாக ரூ.2/- சேர்த்து தொட்டிபாளையம் -வரதராஜபுரம் வரையிலான பயண சீட்டினை வழங்கியது முற்றிலும் தவறாகும் .மேலும் ரூ.10/- பெற்றுக்கொண்டு மீதி தொகை வழங்காதது மோசடியான செயல்களாகும் . இவ்வாறு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மாத்திரமில்லாமல் பயணிகள் ஏறும் இடம் இறக்குமிடத்தினை மாற்றி கூடுதல் வழித்தடத்திற்கான பயண சீட்டினை வழங்கியதுடன் மீதி தொகையும் வழங்காதது குறித்தும் இவர்களால் வழங்க்பட்ட பயண சீட்டுகள் உண்மைதன்மை குறித்து விசாரணை செய்தும் கூடுதல் கட்டணம் வசூலித்தல் பயண சீட்டுமுறைகேடு ஆகியவை குறித்து விசாரணை செய்து சம்பந்தபட்ட நடத்துனர்கள் உரிமம் பெற்றவர்களா என்பதையும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு டிக்கெட் மனுவினை இணைத்து புகார் மனு அனுப்பியுள்ளார் .