பீகாரை சேர்ந்தவர் ரஞ்சன்குமார் (20). இவர் கோவை அடுத்த அன்னூர்
கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ரஞ்சன்குமார் பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் அவரின் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
சில நாட்கள் கழித்து மீண்டும் தனது காதலை கூறியுள்ளார். அப்போதும் இளம்பெண் காதலை மறுத்து அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த ரஞ்சன்குமார்
நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சன்குமாரின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: