கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி.இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்தனர். பின்னர் இருவரும் 2-வது திருமணம் செய்து கொண்டனர். இதனால் சிறுமி தனது
பாட்டி வீட்டில் இருந்து படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டு
இருந்தார். அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி காளிமுத்து (47) என்பவர் சிறுமி குளிப்பதை பார்த்தார்.
உடனே அவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்தார். அவர் அங்கு யாரும்
இல்லாததை பார்த்து திடீரென குளியலறையில் இருந்த சிறுமியிடம்
சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம்
போட்டார்.
இதனால் காளிமுத்து பயந்து போய் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர்
சிறுமி நடந்தவற்றை தனது பாட்டியிடம் கூறி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி
அடைந்த சிறுமியின் பாட்டி ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைமலை போலீசார் தப்பி ஓடிய காளிமுத்துவை தேடி வந்தனர்.
அப்போது ஆனைமலையில் பதுங்கி இருந்த காளிமுத்துவை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆனைமலை போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்கள் காளிமுத்து மீது போக்சோ
வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
%d bloggers like this: