கள்ளக்காதல் விவகாரம் :நகை தொழிலாளி தற்கொலை

கோவை குனியமுத்தூர் அடுத்த பி கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் என்பவரின் மகன் ரமேஷ் (39). இவர் காந்தி பார்க் பகுதியில் உள்ள நகை பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கு திருமணம் ஆகி சின்ன சகாயராணி 37 மனைவியாக உள்ளார். இந்நிலையில் ரமேஷுக்கு ஜனனி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது குறித்து சின்ன சகாயராணிக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு சின்ன சகாயராணி வடவள்ளி பகுதியில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று விட்டார் . தொடர்ந்து ரமேஷின் நண்பர் செந்தில் என்பவர் ரமேஷின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் .அவர் புறப்பட்டு சென்று விட்டார். மீண்டும் நேற்று மாலை ரமேஷ் வீட்டிற்கு செந்தில் சென்ற போது ரமேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.