செல்போன்,பணம் பறித்த வாலிபர்கள் கைது

தொகை சுங்கம் பைபாஸ் ரோடு சிவராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் என்பவரின் மகன் மோகன் (44). இவர் ராம் நகர் பகுதியில
ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கோவை ராமநாதபுரம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார் .அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த மோனிஷா அந்தோணி (22) என்பவர் அங்கு வந்தார். தொடர்ந்து மோகனிடம் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். மோகன் தன்னிடம் பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார் .இதை அடுத்து ஆத்திரமடைந்த மோனிஷா அந்தோணி தனது நண்பர் பிரசன்னா உடன் சேர்ந்து மோகனை சரமாரியாக தாக்கினார். கத்தியால் அவரை குத்தி விடுவதாக கூறி மிரட்டினார் .பின்னர் மோகன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் 5 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதை தொடர்ந்து மோகன் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .விசாரணையில் மோகனிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்த சகாயநாதன் என்பவரின் மகன் மோனிஷா அந்தோணி (22) மற்றும் நாகராஜன் மகன் பிரசன்னா (22 )ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.