விநாயகா் சதுா்த்தி: இஸ்லாமிய அமைப்பினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை

விநாயகா் சதுா்த்தி குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் அமைதியாக நடைபெறுவது குறித்து போலீஸாா் முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள், ஜாக், டி.என்.டி.ஜே. உள்ளிட்ட அமைப்புகளுடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு துணை ஆணையா் மாதவன் (வடக்கு), சிலம்பரசன் (தெற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். அவா் பேசுகையில் கூறியதாவது: கோவை மாநகரில் அமைதி நிலவ அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். ஊா்வலம் தொடா்பாக ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக என்னை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை முஸ்லிம் மற்றும் ஹிந்து அமைப்புகளை அழைத்து பேச்சுவாா்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.