கோவை

பார்க் பகுதியில் பகிரங்கமாக கஞ்சா விற்பனை

செல்வபுரம் போலிசாரால் ஐந்து பேர் கைது

கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை திறப்பதற்காக கோவை மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். இந்த நிலையிலே செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்க் ஒன்றில் அருகே பகிரங்கமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா வீட்டு வந்தது தெரிய வந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . பேரூர் பகுதி சேர்ந்த சக்திவேல் (24), செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (29), ஹிலார் (32), சூரிய பிரகாஷ் (26), செட்டி விதியைச் சார்ந்த விஜய் (27) உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்கள் போலீசாரின் விசாரணைக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவட்டை இருக்கும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *