
கோவை,
ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது . அதன் ஒரு பகுதியாக கணபதி சர்க்கிள் சார்பில் கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கணபதி பகுதியில் கொண்டாடப்பட்டது. கோவை மாநகர் வடக்கு மாவட்ட துணை தலைவர் திருமலை எம்.ரவி ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு கோவை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் த. செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், ,தெற்கு மாவட்ட தலைவர் வி. வி வாசன், மாநில செயலாளர் சிகாமணி மாநில மாணவரணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கணபதி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் மோர் மார்க்கெட் சுந்தரம், தெற்கு மாவட்ட துணை தலைவர் அய்யாசாமி ,பொருளாளர் ராம் நகர் சக்தி, வடக்கு மாவட்ட துணைத் தலைவர் குனிசை ரவி சந்திரன், சர்க்கிள் தலைவர் முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் ரஃபி, கவுண்டம்பாளையம் சர்க்கிள் தலைவர் சிவராஜ் ,சிங்கை சர்க்கிள் தலைவர் வின்சென்ட் , நிர்வாகிகள் சின்னச்சாமி, இஸ்மாயில், ஜெயச்சந்திரன், மாணவரணி சார்லஸ் ,ரகு ,பிரவீன், ஆறுமுகம் 49 ஆவது வார்டு தனசேகரன் 42 வது வார்டு மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.