16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி இயக்குனரை கைது செய்ய வேண்டும்: இந்து மகா சபா மாநில செயலாளர் கோரிக்கை

 

அகில பாரத இந்து மகா சபாவின் மாநில செயலாளர் பிரேம் சேதுபதி மத்திய மண்டல போலீஸ் ஐஜி  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , டி.எஸ்.பி., குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர் மற்றும் சிறார் காவல் பிரிவு ஆகியோருக்குப் அனுப்பியுள்ள மனுவில்  கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா ஆதனூர் கிராமம் சேர்வைக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 46). இவர் கரூரில் உள்ள ரெயின்போ ஹெல்த் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்’  யுஜிஆர் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனராகவும்  பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.  

இதன் தொடர்ச்சியாக அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து கடவூர் வட்டார மகளிர் ஊர் நல அலுவலர் மாரியம்மாள்  அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியன் மீது போக்சோ மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நாட்கள் கடந்த நிலையிலும், குற்றச்சாட்டுக்கு ஆளான பாண்டியனை போலீசார் இதுவரை கைது செய்யாமல் உள்ளனர். 

“16 வயது சிறுமியை 46 வயது நபர் திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ள கொடூரச் செயலில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எவ்வித சமரசமும் இன்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், போக்சோ வழக்கில் சிக்கியுள்ள நபர் முக்கிய பொறுப்பில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், எவ்வித பாரபட்சமும் இன்றி ஆவணங்களின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தி, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.”

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *