
கோவை,
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதைத்தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு சான்றிதழ் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட விளையாட்டு துறை, தென்னை ஆராய்ச்சி மையம், கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மாவட்ட ஆலோசனை மையம் சிறப்பாக பணியாற்றிய
176 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக சேவை செய்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ,சவுரிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட முன்மாதிரி கிராம விருது கேடயம் மற்றும் 7.5 லட்சம் பரிசு தொகையை பரிசு தொகையை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் பெற்றது.