கோவை, நவ. 2:

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் எல்ஜேகே கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்எல்ஏ அறிவுறுத்தி இருந்தார். மாவீரன் நெல்லை ஜீவா , மாநில முதன்மை அமைப்புச் செயலாளர் கோவை கார்த்திகேயன் ,கோவை தெற்கு மண்டலச் செயலாளர் முகமது சமீர்ஆகியோரின் ஆலோசனை பேரில் எல்.ஜே.கே. கட்சியின் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் அரவிந்த்ராஜா அரிசிப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக, முத்து அவென்யூ பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் அரவிந்த் ராஜா கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், அப்பகுதியில் முறையான சாலை வசதி அமைத்துத் தர வேண்டும், சுகாதாரத்தை பேண கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும், தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், புதிய மின்சார தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலன் கருதி குடிநீர் மேல்நிலைத் தொட்டியை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை ஊராட்சி செயலாளரிடம் நேரில் எடுத்துக்கூறி மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *