கானல் நீரான உயர் கல்விகரம் கொடுத்த காவல் துறை

கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவரை மீண்டும் படிப்பை தொடர உதவிய கோலீஸ் கமிஷனரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை மாநகரில் இளம் குற்றவாளிகளை தடுக்கும் பொருட்டு பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க போலீசாரால் ‘ஆபரேஷன் ரீபூட்’ என்ற திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம், 221 இடைநின்ற பள்ளி குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை மூலமாக இடை நின்ற மாணவர்களை போலீசார் கண்டறிந்து வருகின்றனர். அவர்களின் வீட்டுக்கு சென்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து பேசி மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல போலீஸ் ஸ்டேஷன் வாரியாக சந்தர்ப்ப சூழ்நிலையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப சூழ்நிலை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அப்போது ஆர்.எஸ்.,புரம் போலீசார், 2021ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட காமராஜபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன்(23)என்பவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதில் இவரது உடன் பிறந்த தம்பி பிரசாந்த்(19), என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைக்கு சென்று வந்ததும், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அது குறித்த தகவல்களை ஆர்.எஸ்., புரம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரிவித்தனர். இதையடுத்து பிரசாந்துக்கு தொண்டாமுத்துாரில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு சேர்ந்து மீண்டும் படிப்பதற்கு கமிஷனர் உதவிகளை செய்தார். இவர் தற்போது கல்லுாரி சென்று படித்து வரகிறார். போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மாநகரில் மேலும் இதேபோல கொலை செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *