கோவை,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி (43). பெண்களுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். கணவனை பிரிந்து இவர் தனியாக வசித்து வருகிறார் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வ தர்ஷினி தஞ்சாவூர் கோயிலுக்கு சென்றுள்ளார் .அந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நலம் கோளாறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் வின் மெடிகேர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் மருந்து விற்பனை  பிரதிநிதி இளங்கோவன் என்பவரின் மகன்  அருண்குமார் (42) என்பவர் விஷ்வ தர்ஷினியிடம்  அறிமுகமாகியுள்ளார் .அப்போது அவருக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை அவர் செய்துள்ளார் . சிகிச்சை முடிந்த பின் விஸ்வ தர்ஷினி கோவைக்கு திரும்பினார். அதன் பிறகு அருண்குமார் நலம் விசாரிப்பது போல அடிக்கடி விஸ்வதர்ஷினிக்கு போன் செய்து பேசியுள்ளார் .அதன் பிறகு ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்பியுள்ளார். விஷ்வ தர்ஷினி இதனை கண்டித்துள்ளார் .ஆனாலும் தொடர்ந்து அருண்குமார் அவ்வாறு செய்து வந்துள்ளார் .இந்நிலையில் கோவைக்கு அலுவலக விஷயமாக வருவதாக கூறி அருண்குமார் வந்துள்ளார். அப்போது ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள விஸ்வ தர்ஷினி வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். அதன் பிறகு கடந்த மாதம்  அருண்குமார் மீண்டும் கோவைக்கு வந்துள்ளார் .அப்போது விஷ்வ தர்ஷினியை  அவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனே அருண்குமார் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள விஸ்வ தர்ஷியின் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பிற்குள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார் .பின்னர் விஸ்வ தர்ஷினி வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார் கதவை திறந்த விஸ்வ தர்ஷினி அதிர்ச்சியடைந்துள்ளார் . பின்னர் அருண்குமார் அவசர வேலையாக கோவைக்கு வந்ததாக கூறி விஸ்வ தர்ஷினி வீட்டிற்குள் சென்றுள்ளார்.அப்போது குடிபோதையில் வந்திருந்த அருண்குமார் விஷ்வ தர்ஷினியிடம் தகாத வார்த்தைகள் பேசி பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்வ தர்ஷினி அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியிடம் தகவல் தெரிவித்தார் .உடனே அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் அருண்குமாரிடம் வந்து விசாரணை நடத்தினர் .அப்போது அருண்குமார் அவர்களிடம்  தகராறு செய்துள்ளார். பின்னர் தகராறு முற்றி கை கலப்பாக  மாறியது. உடனே விஷ்வ தர்ஷினி போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார. போலீசார் அங்கு வருவதற்குள் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார் .தொடர்ந்து அருண் குமார் மீது  விஸ்வ தர்ஷினி கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அருண்குமாரை போலீசார் விசாரணைக்கு வருமாறு தொடர்ந்து அழைத்தனர் .ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் ஏமாற்றி வந்தார் .இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தஞ்சாவூர் சென்று அருண்குமாரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.பின்னர் அருண்குமாரிடம் நடத்திய விசாரணையில்  அவர் தஞ்சாவூர் மாவட்டம ரெட்டிபாளையம் ரோடு செந்தமிழ் நகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருவதாகவும் இதே போல பல பெண்களிடம் மருத்துவ உதவிகள் செய்வது போல  அத்துமீறி நடந்து கொண்ட விஷயமும்  தெரிய வந்தது . பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *