தமிழகத்தில் வளர்ந்த நகரங்களில் நமது கோவையும் ஒன்று கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமாக இன்று வரை திகழ்ந்த இடம் நமது வ உ சி உயிரியல் பூங்கா ஏழை மக்களின் வண்டலூர் என அழைக்கப்பட்ட வ உ சி பூங்கா 1965 ஆம் ஆண்டு கோவை நகராட்சியால் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இங்கு சிங்கம் புலி கரடி மயில் அன்னப்பறவைகள் பாம்புகள் ஒட்டகம் ஒட்டகச்சிவிங்கி குரங்கு கழுகுகள் என அனைத்து விதமான பறவைகளும் விலங்குகளும் ஒரே இடத்தில் பொதுமக்கள் பார்த்து மகிழ அமைந்திருந்தது இந்தப் பூங்காவை கோவை மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் கோவைக்கு வருபவர்கள் வ உ சி பூங்கா சென்று விலங்குகளையும் பறவைகளையும் பார்த்து ரசித்த வண்ணம் இருந்தனர் இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு இங்கிருந்த சிங்கம் மற்றும் புலிகளை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த வ உ சி பூங்காவின் லைசென்ஸ் காலாவதி ஆகிவிட்டது அதனால் நகரின் மையத்தில் இருந்த வ உ சி பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற முதலில் முடிவு செய்யப்பட்டது அதனால் மேட்டுப்பாளையம் சாலை பிரபு நகரில் உள்ள அரசு நிலம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு நிலம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு பகுதியில் வ.உ.சி பூங்காவை அமைக்கலாம் இன முதலில் மாநகராட்சியால் திட்டமிடப்பட்டது ஆனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக இருந்த வ உ சி உயிரியல் பூங்கா நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனால் இங்கிருந்து அனைத்து உயிரினங்களும் வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை வன அதிகாரிகளால் நடைபெற்று வருகிறது 50 ஆண்டுகளைக் கடந்து கோவையின் ஒரு அடையாளமாக இருந்த வ உ சி உயிரியல் பூங்கா நிரந்தர மூடு விழா கண்டது கோவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வ உ சி பூங்காவை மூடு விழா காணாமல் தடுக்க பொதுநல ஆர்வலர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ கோவை மாநகராட்சி உறுப்பினர்களோ கோவை பாராளுமன்ற உறுப்பினரோ மக்கள் பிரதிநிதிகள் என யாருமே மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சி யின் பெயர் கொண்ட பூங்காவை காப்பாற்ற எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஏமாற்றப்பட்ட கோவை மக்களின் மிகப்பெரிய மனக்குமுறலாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *