கட்டுமான பொருட்கள் விலையை அரசு கட்டுப் படுத்த கொஜினா கோரிக்கை

கோவை,

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் கொஜினா 

 சங்கத்தின் சிறப்பு கூட்டம்  சங்கத்தின் தலைவர் பொறியாளர் ராஜதுரை  தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தாமோதர சாமி, பொருளாளர் சோமசுந்தரம், துணைத் தலைவர் மரியா ஆரோக்கியசாமி உடனடி முன்னாள் தலைவர் ஜெயவேல் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .தொடர்ந்து நடைபெற்ற  கூட்டத்தில்  கோரிக்கைகளை தீர்மானங்கள் 

நிறைவேற்றப்பட்டன.அதில்  கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக கிரஷர் ஒனர் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தற்போது எம் சாண்ட் ஜல்லி போன்ற மூலப் பொருட்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. அதேபோல் ரெடி மிக்ஸ் கான்கிரட் விலையும்     அதிகரித்துள்ளது, ஆனால்   பொறியாளர்கள் ஏற்கனவே ஒரு விலை பேசி கட்ட உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்து வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென அதிகப்படியான விலை ஏற்றத்தால்  செய்வதறியாது தொழிலில் தொடர தள்ளப்பட்டுள்ளோம்.  தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை மறுபடியும் பழைய விலைக்கு விற்பதற்கு தக்க நடவடிக்கை வேண்டும். சில மாதங்களுக்கு முன்னதாக கோவையில் கட்டுமான துறை சார்பாக நடைபெற்ற மாநாட்டில்  அமைச்சர் முத்துசாமியிடம்  கொடுத்த   கோரிக்கைகளையும் நிறைவேற்று மாறும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக நிரந்தரமாக விலை நிர்ணய குழு அமைத்திடவும், பொறியாளர்களுக்கு கவுன்சில் அமைத்திட வேண்டும் . கூட்டத்தில்  மில்லர் ஒயர்ஸ் மற்றும் கேபிள்ஸ் நிறுவனத்தின் எம்.டி.சந்திப் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .இந்த கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு பாலிசி சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *