
கோவை,
கோவை கள்ளிப்பாளையம் அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கே. வேணுகோபால்.
கோவை ஆர். எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்தில் கடந்த 2021 ல் இருந்து மாட்டு பண்ணை நடத்தி வருகிறார்.
இந்த தியேட்டர் வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மாட்டுப் பண்ணை வைக்க இடத்தின் உரிமையாளர்கள் பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் இடத்தை குத்தகைக்கு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நிர்மலா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவிதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாலசிங்கம், மணிகண்டன், பாரதி இவர்கள் 5 பேரும் சேர்ந்து பண்ணையை காலி செய்ய மிரட்டி உள்ளனர்.காலி செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் கொலை விடுவோம் எனவும் அங்கு உள்ள மாடுகளுக்கு சாப்பிடும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் தேடி வந்தனர்.அந்த சமயத்தில் மாட்டுப் பண்ணைக்கு செல்லும் வழியை மறித்து வட மாநில தொழிலாளியை இரும்பு ராடல் தாக்கிய வழக்கில் இடத்தின் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த ரவுடி ஆனந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர் . மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வேணுகோபாலுக்கு சொந்தமான பெத்தநாயக்கன் பாளையம் தோட்டத்தில் ஒரு பகுதியில் வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மின் இணைப்பு மற்றும் சிசிடிவி இணைப்புகளை துண்டித்துள்ளனர். தொடர்ந்து தோட்டத்து வீட்டிலிருந்த இரும்பு பெட்டிகளை உடைத்து அதிலிருந்த வெள்ளி குத்து விளக்கு, வங்கி கணக்கு புத்தகம் வங்கி வரவு செலவு விவரங்களும், காப்பீட்டு பத்திரங்களும் மணிகண்டன் மாட்டு பண்ணை வைக்க எழுதி கொடுத்த வாடகை பத்திரம் மற்றும் 10 வருட குத்தகை பத்திரமும் திருட்டு போயிருப்பதை கண்டு வேணுகோபால் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது ஆர்.எஸ்புரம் கென்னடி தியேட்டர் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள நிர்மலா, கவிதா, பாலசிங்கம், மணிகண்டன், பாரதி அவர்களுடன் சுற்றி வந்த ஆனந்தின் கூட்டாளிகள் போல அடையாளம் தெரிந்துள்ளது. இதுகுறித்து வேணுகோபால் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார்
ஆர் எஸ் புரம் பால்பண்ணை விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்து தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா, நிர்மலா,
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாலசிங்கம் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.