நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி கோவையில் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது.
பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இந்த சூழலில் கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியில் ஆன்ட்ரியா இசைக்கச்சேரி நடைபெறுகிறது.
வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறும் இந்த இசைக்கச்சேரி குறித்து ஆன்ட்ரியா செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது …
கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. இந்த கச்சேரி நன்றாக நடைபெற்றது. தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகிறது.
கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் வகுப்புக்கு சென்றதால் தற்போது ஈசியா பாடுகிறேன்.
நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை.
பாடல் பாடுவதற்கு சினிமா துறையில் இப்போது எல்லாம் வாய்ப்பு கிடைப்பது ரொம்ப ஈசி. இன்ஸ்டாகிராமில் நாலு வீடியோக்கள் போட்டாலே போதும்.
கல்லூரி மாணவர்களை எனக்கு பிடிக்கும். அவர்கள் தான் எனது முக்கிய ஆடியன்ஸ். எனது இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்து கண்டிப்பாக கொண்டாடுவீர்கள். இனி அடுத்து எப்போது இது போன்ற நிகழ்ச்சி நடைபெறும் என எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இசைக்கச்சேரிக்கு ரூ.250, 500, 1000 மற்றும் ரூ.1500 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.