கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தை காண வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்து, அதனைத் தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது. தேர் வலம் வரும் பகுதி முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள் உப்பை மற்றும் மிளகை வீசி அம்மனை வழிபட்டனர்.
தேரோட்டத்தை காண கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தேரோட்டத்தை கண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வணங்கினர்..
%d bloggers like this: