கொசீனா  புத்தாண்டு சிறப்பு கூட்டம் 

கோவை,

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கமான கொசீனா  புத்தாண்டு சிறப்பு கூட்டம்  கோவை பீளமேடு அருகிலுள்ள கோ இண்டியா ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இன்ஜினியர் ஜெயவேல் தலைமை ஏற்று நடத்தினார். செயலாளர் இன்ஜினியர் ராஜதுரை கடந்த மாதங்களில் நடைபெற்ற சங்கத்தின் செயல்பாடுகளை தொகுப்பாக வழங்கினார். அதன்பின்னர் பொருளாளர் இன்ஜினியர் பழனிசாமி  கடந்த மாதங்களின் கணக்குகளை தாக்கல் செய்தார்.மேலும் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் பெருமாள்  கட்டமைப்பு சம்பந்தமான தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தி பொறியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்கள் கூறினார். கருமத்தம்பட்டி அல்டிமா டிரேடர்ஸ் நிறுவனத்தார் இந்த விழாவினை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் பெருமாள் சங்க நிர்வாகிகள் மற்றும் சஙக உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.