கோவை,
தமிழக அரசு தொழில் பூங்கா அமைக்க அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள ஆறு பஞ்சாயத்துகளில் 3 ஆயிரத்து 731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஆணை வெளியிட்டது .இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை அன்னூர் மண்ணீஸ்வரர் கோவிலில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர் .இந்த நடைபயணத்தின் முடிவில் புளியகுளம் விநாயகருக்கு மனு அளிக்க உள்ளனர். அந்த மனுவில் தமிழக அரசு எங்களது நிலங்களை எங்களின் அனுமதி இல்லாமல் அபகரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. நாங்கள் அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை .ஆகவே நீங்கள் தான் எங்களை இந்த மீளா துயரத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று எழுதி உள்ளனர். தமிழக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் விநாயகருக்கு மனு அளிப்பது புதுமையாக உள்ளது.