கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் இருகூர் கிளை துவக்க விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 
கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் தலைவர் டி. முத்துப்பாண்டி கிளை அலுவலகத்தை திறந்து வைத்து சங்க கொடி ஏற்றி வைத்தார்.தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு இருகூர் கிளை தலைவர் எம் .ஆறுச்சாமி தலைமை வகித்தார். தலைமை கமிட்டி பொருளாளர் சாமுவேல்ராஜ் ,செயலாளர பாஸ்கரன் ,அவைத்தலைவர் தேவராஜ், இருகூர் கிளையின் அவை தலைவர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருகூர் கிளையின் செயலாளர் தங்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். 
 சிறப்பு அழைப்பாளர்களாக இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன், இயற்கை வேளாண் ஆர்வலர் தங்கவேலு டாக்டர் முத்து மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் எம். முத்து சரவண குமார், கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு இருகூர் கிளையின் பொருளாளர் செந்தில்குமார் நன்றி உரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இருகூர் கிளை கிளைத் தலைவர் ஆறுச்சாமி செயலாளர் தங்கராஜ் பொருளாளர் செந்தில் குமார் அவை தலைவர் செல்வம் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். தலைமை கமிட்டியின் துணைத்தலைவர்கள் செல்வின் ராஜன் ,காளிதாஸ், பழனிச்சாமி , தலைமை கமிட்டி ஆலோசகர்கள் முத்துப்பாண்டி ,சுப்பிரமணியன், ரவி கிருஷ்ணன், எல் ஐ சி பாலகிருஷ்ணன் , துணைச் செயலாளர் நாராயணன் ,செய்தி தொடர்பாளர் தனிஷ் மற்றும் சின்னியம்பாளையம் , தென்னம்பாளையம் குரும்பபாளையம் ,தடாகம் , ராமநாதபுரம் , சவுரி பாளையம், பாப்பம்பட்டி கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைவர் முத்துப்பாண்டி பேசும் போது வர்த்தகர்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது கோவை மாவட்ட வர்த்தக சங்கம் என்றும் , அரசு வருமானத்தில் பெரும் பங்கு வர்த்தகர்களின் வர்த்தகர்களின் வரி மூலம் கிடைப்பது தான் என்றும் எனவே வர்த்தகர்களை பாதிக்கும் செயல்களுக்கு அரசு துணை போகக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் .
 கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழக அரசை பாராட்டியும் , ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் , செஸ் வரியை நீக்க வேண்டும் , சிறு வர்த்தகர்களை பாதிக்கும் வணிகவரித் துறையின் டெஸ்ட் பர்சேஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .