கோவை,

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் எனக் கூறி 68 பேரிடம்  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய்  பணம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆத்மா சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதிகள் வசித்து வருபவர் ஆத்மா சிவக்குமார். தொழிலதிபரான இவர் சமூக சேவை செய்வதாக கூறி வருபவர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியர் காலத்தில் அதிமுக அமைச்சர்கள் பலரும் தனக்கு நெருக்கமானவர் என பலரிடமும் கூறி வந்தவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பொன்மேடு நொச்சி கேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்தான் என்பவரின் மகன் மாரிச்சாமி (34). என்பவர் அவரது தூரத்து உறவினர் சுப்பிரமணி என்பவர் மூலம் ஆத்மா சிவக்குமாரை சந்தித்துள்ளார். அப்போது ஆத்மா சிவக்குமார் தான் முன்னாள் நிதியமைச்சர் பொன்னையனுக்கு செல்லப்பிள்ளை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி மிகவும் நெருக்கமானவர் என்றும்  கூறி இருக்கிறார். மேலும் அதிமுக அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் கூறியிருக்கிறார் .தொடர்ந்து மாரிச்சாமி தான் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும் வேற ஏதாவது வாங்கித் தருமாறு கூறியிருக்கிறார். உடனே ஆத்மா சிவக்குமார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவரிடம் சொல்லி கிராம நிர்வாக அலுவலர் வேலை பெற்று தருவதாகவும் அதற்குண்டான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாறும் கூறியிருக்கிறார் .இதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்றும் ஆத்மா சிவக்குமார் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து மாரிசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதினார். பின்னர்  மீண்டும் ஆத்மா சிவக்குமாரை சந்தித்தார். அப்போது ஆத்மா சிவகுமார் பணத்தை தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாரிச்சாமி 5 லட்சம் ரூபாயை  ஆத்மா சிவகுமார் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்றவுடன் ஆத்மா சிவகுமார் ஒரு மாதத்தில் பணி ஆணை கிடைத்தவுடன் என்று கூறி இருக்கிறார்.பின்னர் சில நாட்களில்  மூன்று லட்ச ரூபாயை ஆத்மா சிவகுமார் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். அதன் பின்பு ஒரிஜினல் சர்டிபிகேட்களை எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு செல்லுமாறு ஆத்மா சிவக்குமார் கூறியிருக்கிறார் .அங்கு சென்ற போது ஒருவர் தொடர்பு கொண்டு மாரிசாமி இடமிருந்து ஒரிஜினல் சர்டிபிகேட்களை வாங்கிக்கொண்டு பத்து நாட்களில் பணி நியமன ஆணை வந்து விடும் என்று நம்பிக்கையுடன் கூறி அனுப்பியுள்ளார். பின்னர் சிறிது சிறிதாக 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஆத்மா சிவகுமார் பல்வேறு தவணைகளாக வாங்கிக் கொண்டார். ஆனால் பணம் வாங்கி வெகு நாட்களாகியும் மாரிசாமிக்கு வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து கொடுத்த பணத்தை மாரிச்சாமி கேட்டு வந்தார். ஆனால் ஆத்மா சிவகுமார் பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். மேலும் பணம் கொடுத்து ஐந்து ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியும் மாரி திமுக ஆட்சி வந்துவிட்டது. ஆனால் ஆத்மா சிவகுமார் வேலை வாங்கி தருவதாக கூறிய 10 லட்சம் ரூபாய் கொடுக்காமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை மாரிச்சாமி உணர்ந்தார் .இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .விசாரணையில் ஆத்மா சிவக்குமார் இதேபோல 68 பேரிடம் ஆர்டிஓ அலுவலகம், சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆத்மா சிவகுமார் (53) என்பவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த பங்குதாரர்   மணிகண்டன், ஆத்மா சிவகுமாரின் மூத்த சகோதரிசகோதரி சத்தியபாமா மற்றும் அவரது கணவர் ஜெயகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் முன்னாள் அமைச்சர்கள் பெயரைச் சொல்லி ஏராளமானவரிடம் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.