கோவை,
கோவை பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் மஞ்சுளா. இவர் நேற்று தெற்கு உக்கடம் அற்புதம் நகர் 1-வது வீதியில் இருந்து 7-வது வீதி வரை வழக்கு சம்பந்தமாக சந்தேகத்திற்குரிய ஒருவரை தேடி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா 1-வது வீதியில் வந்து அங்கிருந்தவர்களிடம் அந்த நபர் குறித்து கேட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த ஒருவரிடம் மஞ்சுளா அவர் தேடி வந்த நபர் குறித்து கேட்டார். அதற்கு அவர் மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தகராறு செய்தார். இதனால் மஞ்சுளா அங்கிருந்து சென்றார். பின்னர் இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தெற்கு உக்கடம் அற்புதம் நகர் 1-வது வீதி சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பதும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: