கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் குரும்பபாளையம் கிளை துவக்க விழா

கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் குரும்பபாளையம் கிளை துவக்க விழா நடைபெற்றது . முன்னதாக அவிநாசி ரோடு சூலூர் பிரிவில் உள்ள குரும்பபாளையம் கிளை அலுவலகத்தை கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் முத்துப்பாண்டி திறந்து வைத்து சங்க கொடி ஏற்றினார் . அதன் பின் யோகேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குரும்பபாளையம் கிளை தலைவர் வெனித் ராஜ் தலைமை தாங்கினார் . கிளை அவை தலைவர் வீரதுரை மற்றும் துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேவிப்பிரியா, மகாலட்சுமி, விமலா ராணி ,இளவரசி, ரேணு அனிதா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். கிளைச் செயலாளர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார் . விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் , டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் மருத்துவமனை சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . வர்த்தக சங்க பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம் ,பொருளாளர் சாமுவேல் ராஜ், செயலாளர் பாஸ்கரன், அவைத்தலைவர் தேவராஜ், சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரைை வழங்கினார்கள் . செய்தி தொடர்பாளர் தனிஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் . துணைத் தலைவர்கள் செல்வின் ராஜன் , காயத்ரி காளிதாஸ் , ஆலோசகர்கள் முத்துப்பாண்டி, எல்.ஐ.சி பாலகிருஷ்ணன், சின்னியம்பாளையம் கிளைத்தலைவர் சுடலை மணி , தென்னம்பாளையம் கிளைத் தலைவர் செல்வராஜ் , காட்டம்பட்டி கிளை தலைவர் பிரகாஷ் , தடாகம் கிளை தலைவர் அன்புராஜ் , இருகூர் கிளை தலைவர் ஆறுச்சாமி , ராமநாதபுரம் ஜெய்சிங் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . கூட்டத்தில் துணைத் தலைவர் சத்யநாராயணா துணைச் செயலாளர்கள் நாராயணன், செல்வன் , தென்னம்பாளையம் உதயகுமார் , ஆலோசகர்கள் ரவி கிருஷ்ணன், பாபு ,நாகராஜன் , பகுதி நிர்வாகிகள் நடராஜன் ,தனசிங் , பாஸ்கர் , பால்ராஜ் ,பவுல் ஞானராஜ் , மனோகர் ,பாலமுருகன், கோடீஸ்வரன் , செயற்குழு நிர்வாகிகள் பழனிச்சாமி ,தங்கராஜ் , அகஸ்டின் ,மகேஸ்வரன் , அற்புதராஜ் , ஜெயபால், மணிகண்டன், மற்றும் சின்னியம்பாளையம் கிளைச் செயலாளர் முத்து, பொருளாளர் ரமேஷ் , தென்னம்பாளையம் கிளைச் செயலாளர் உதயகுமார் பொருளாளர் சதீஷ் அவைத்தலைவர் ஜெயபாலன் , காட்டம்பட்டி கிளை செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெபசீலன் , தடாகம் கிளை செயலாளர் ஜெகன் ,பொருளாளர் விஜய ராஜன், அவைத் தலைவர் ஜெயபால் , இருகூர் கிளை செயலாளர் தங்கராஜ் ,பொருளாவளர் செந்தில்குமார், அவைத்தலைவர் செல்வன் , ராமநாதபுரம் மார்ட்டின் , பாப்பம்பட்டி பிரிவு நாராயணன் மற்றும் குரும்பபாளையம் கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . முடிவில் கிளை பொருளாளர் பொன்ராஜ் நன்றி கூறினார் . விழா ஏற்பாடுகளை குரும்பபாளையம் கிளை நிர்வாகிகளோடு சின்னியம்பாளையம் , தென்னம்பாளையம் ,இருகூர் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர் .