கோவை அவிநாசி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிடன் பத்திரிக்கை ஆசிரியர் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு என்கிற செல்வகுமார் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை அவரது மனைவி ,அம்மா ,இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேரை பீளமேடு போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர் .எதற்காக இந்த மறியல் தொடர் போராட்டங்கள் என்பது குறித்து பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.