ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால்
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

கோவை :
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தில் உள்ள நகர பகுதிகளுக்கு அதிகளவில் பயணிகள் தனியார் பஸ்கள் மூலமாக செல்லக்கூடும். தனியார் பஸ்கள் முன்பதிவு மூலமாக பயணச்சீட்டுகள் பதிவு செய்து வழங்குகின்றன. பயணிகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும்பொழுதோ அல்லது நேரடியாக தனியார் பஸ் நிறுத்தத்திலிருந்து (ஆம்னி பஸ் நிலையம்) ஊருக்கு செல்லும்பொழுது, ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாற்றாக ஏதாவது பஸ் நிறுவனம் பயணிகளிடம் அதிகத் தொகை கேட்டாலோ அல்லது தரக்கோரி வற்புறுத்தினாலோ சம்மந்தப்பட்ட பயணி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்ணிற்கு அல்லது கோவை மாநகர காவல்துறையின் சமூக வலைத்தளத்திற்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பயணியின் தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பஸ் நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பஸ் பயணசீட்டு முறைகேடு குறித்து தகவலளிக்கும் தகவலாளியின் விபரங்கள் முற்றிலும் ரகசியம் பாதுகாக்கப்படும்.