விஜயதசமி தினத்தன்று குழந்தைகள் கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அதனடிப்படையில் கோயில்களில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் ஆரம்பிப்பர். இந் நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் பொற்கோவிலில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் விதமாக ” வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது . வருடம் வருடம் இந்த கோயிலில் விஜயதசமி அன்று இந்த நிகழ்வு விமர்சையாக நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த வருடமும் விஜயதசமியை முன்னிட்டு வழிபாட்டு நடத்தப்பட்டு வருகின்றது. குழந்தைகளின் விரலை பிடித்து ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா என எழுதியும் பச்சரியில் ”ஓம்” என்றும் ”அம்மா” “ அப்பா” என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இன்றைய தினம் கல்வியை துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோவிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் குழந்தைகளுடன் வழிபட்டு வருகின்றனர். பெற்றோர் குழந்தைகள் வருகையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது