உலக நாடுகளிலே தலைசிறந்த போலீஸ்களில் தமிழக போலீசும் ஒன்று. அந்த தமிழக போலீசின் பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் மோசடி கும்பல் தமிழகத்தில் ஊடுருவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று மதியம் செல்போன் மூலம் அழைத்த மர்ம நபர் ஒருவர் தன்னை சென்னை தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ் ஐ மாரிமுத்து என்றும் உன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு 15 ஆயிரத்து 500 ரூபாய் வேண்டும் என பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.சிறிது நேரத்தில் அழைப்பதாக கூறிய அந்த மர்ம நபர் மீண்டும் அழைத்து கூகுள் பே என் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த எண்ணுக்கு ஒரு ரூபாயையும் கோவை நபர் அனுப்பி வைத்தார்.மீண்டும் சிறிது நேரம் கழித்து அழைத்த அந்த மர்ம நபரிடம் கோவை நபர் இதற்குரிய ரசீதை நானே நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாமா என கேட்டு உள்ளார்.
அதன் பின்பு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபரும் செல்போன் இணைப்பை துண்டித்து சென்று விட்டார்.ஏற்கனவே கோவையில் மேயர் கலெக்டர் பெயர்களில் வட மாநில மோசடி கும்பல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பணம் பறிக்க முயன்று அது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டதால் யாரும் ஏமாறாமல் தப்பித்தனர் .இந்நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்து சிறைக்கு தள்ளி விடுவேன் என கூறி தமிழக போலீஸ் பெயரைச் சொல்லி அதுவும் தாம்பரம் போலீசில் எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி மிரட்டும் நபர் எத்தனை அப்பாவி தமிழர்களிடம் பணத்தைப் பறித்து உள்ளாரோ என்பது தெரியவில்லை.